games

img

டெஸ்ட் போடிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் அவர் 9230 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 நாட் அவுட் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 30 சதங்களையும், 31 அரைசதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார். இதில் 1027 பவுண்டரிகளும், 30 சிக்சர்களும் அடங்கும்.
2024 டி20 உலகக் கோப்பையை வெற்றிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில்; “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகவும் கடினமான முடிவாகும். டெஸ்ட் போட்டிகள்தான் என்னை செதுக்கியதுடன், வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன. கடினமான முடிவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். என்னுடைய டெஸ்ட் பயணத்தை மகிழ்ச்சியுடன் திரும்பி பார்க்கிறேன் என டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ரது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.