நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் குடும்பத்தினரை ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே. பி. ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஶ்ரீராம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.