tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

தஞ்சாவூர், மே 14-தீக்கதிர் செய்தி எதிரொலியாக பூதலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டி புதுத் தெரு கிராமத்தில் உள்ள 30-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் குடிநீருக்காக பல கிமீ தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காகஅருகில் உள்ள புங்கனூர் கிராமத்தில் இருந்து காவிரி தண்ணீர்கொண்டு வர குழாய்கள் பதிக் கப்பட்டன. சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்த நிலையில் இதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதனால் குடிநீருக்காக 2 கி.மீ தொலைவில் உள்ள ராயமுண்டான்பட்டிக்கும், 3 கி.மீ தொலைவில் உள்ள சேளாகம்பட்டிக்கும், 4 கி.மீ தொலைவில் உள்ள திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்திற்கும் சென்று ஆண்கள், பெண்கள் என தண்ணீர் எடுத்துவந்தனர். இதுகுறித்து திங்கள்கிழமை அன்று தீக்கதிரில் விரிவான செய்திவெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவிரி குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடத்தை பார்வையிட்டுஆய்வு செய்தனர். ராயமுண்டான் பட்டி புதுத்தெரு பகுதிக்கு சென்றுஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் களை பொக்லைன் இயந்திரம் மூலம் எடுத்து உடைப்புகளை சரிசெய்து புதிய குழாய்களை பதிக்கும்பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் நிறைவு பெற்றதும் ஓரிரு நாளில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கூறியதாவது:‘‘தீக்கதிரில் செய்தி வெளியானதும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக வந்து பார்வையிட்டனர். குடிநீர் குழாயில்உள்ள அடைப்புகள் சரி செய்யப் பட்டு வருவதோடு, சேதமடைந்த குழாய்களை புதிதாக மாற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.