tamilnadu

img

‘எப்படி வாக்களிப்பது’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஏப்.1-

நூறு சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி தஞ்சைமாவட்டம் ஆவணத்தில் அமைந்துள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்த செயல்விளக்கம் திங்கள் கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) முருகேசன், பேராவூரணி உதவிதேர்தல் அலுவலர் அ.கமலக்கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன்(நிர்வாகம்), செல்வம்(கிராம ஊராட்சி), வட்டாட்சியர் க.ஜெயலெட்சமி, முன்னிலை வகித்தனர். மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ளமாதிரி சின்னங்களில் எப்படி வாக்களிப்பது, யாருக்கு வாக்களித்தோம் என்பது தொடர்பான நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கபட்டது. மண்டல துணை வட்டாட்சியர் மகேஷ் நன்றி கூறினார்.