போபால்:
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.அப்போது? சிஏஏ-வை அமல் செய்தே தீருவோம், என்ன எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்கப் போவதில்லை என்று கொக்கரித்த அமித்ஷா, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் வயதைக் குறிப்பிட்டு, “மத்தியப்பிரதேசத்தில் ‘சிஏஏ’அமலாக்கம் செய்யப்பட மாட்டாது என்று கமல்நாத்ஜி உரத்தக் குரல் எழுப்புகிறார்; ஆனால், கமல் நாத்ஜி இது உங்கள் குரலை எழுப்புவதற்கான வயதல்ல, இந்த வயதில் கத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, மத்தியப்பிரதேச பிரச்சனைகளை முதலில் தீருங்கள்” என்றுகிண்டல் செய்திருந்தார்.இந்நிலையில், “மக்களுக்கு வயது முக்கியமல்ல மாறாக பணிதான் முக்கியம்” என்றுஅமித்ஷாவுக்கு, கமல்நாத் பதிலடி கொடுத்துள் ளார். மேலும், “நாங்கள் செய்து முடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம், வெற்று வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதை அல்ல;மக்களும் என் பணியைத்தான் பார்க்கின்றனரே தவிர என் வயதையல்ல; அவர்கள் இந்த முதியவனிடம் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்றும் விளாசியுள்ளார்.