திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கையை தொடர்ந்து கோப்டிரஸ்ட் நேசக்கரங்கள் சார்பில் மணிகண்டம் ஒன்றியம் வண்ணாங்கோவில் உள்ள ஒளிஇல்லத்தில் 205 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட ரூ.1200 மதிப்புள்ள நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்ட சப்-கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்தார். கோப் டிரஸ்ட் நேசக்கரங்கள் நிறுவனர் அருட்தந்தை சேசுசத்திய நாதன், அருட்தந்தைகள் சபரிராஜ், அந்தோணிசாமி, ஆலிஸ், சகாயராஜ், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். ஊராட்சி தலைவர்கள் ஜார்ஜ்பெர்னான்ட்ஸ், பாரதிதாசன், துரை, அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.