தருமபுரி, ஜூன் 14- பென்னாகரம் தேர் விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் நிவாரணத்தொ கையை வழங்கினார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திரு விழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். மேலும், படுகாயமடைந்து அரசு தரும புரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு முத லமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் 4 நபர்க ளுக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலை களை வழங்கினார்.