திருவாரூர்: திருவாரூரில் நலிவுற்ற கிராமிய கலைஞர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க மூத்த நிர்வாகி சு. தியாகராஜன் தலைமையில்நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மு.சௌந்தரராஜன், ஆர்.பகவன்ராஜ், மா.சண்முகம், ஆர்.கோவிந்தராஜ் பங்கேற்றனர். நாட்டுப்புற கலைஞர்கள் இருபது பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்க மாநில மையத்தின் உதவியுடன் இந்த தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆரூர் மகாலிங்கம் கிராமிய பாடல்களை பாடினார்.
சங்க கூட்டம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் மாதர் சங்க இடைக் கமிட்டி கூட்டம் ஒன்றியத் தலைவர் வி.வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, துணைத்தலைவர் எஸ்.மீனா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.