அருமனை, ஜூன் 22- கன்னியாகுமாி மாவட்டம் அருமனை மாறப்பாடியில் ஏழை-எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வரு கின்றனர். இந்நிலையில் திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை குளோ பல் கிவ்விங்ஸ் சமூக ஆர்வலர்கள், வீட்ஸ் தொண்டு நிறு வனம் இணைந்து 120 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி னர். நிவாரண பொருட்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ் மக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சார்லஸ், ராபர்ட், பணியாளர்கள் இருளப்பன், சுஜின், சாந்தகுமாாி, ஜூலி யட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.