tamilnadu

img

சங்கரன்பந்தலில் மருத்துவ முகாம்

தரங்கம்பாடி, ஜூலை 28- நாகை மாவட்டம் சங்கரன்பந்தலில் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரக் குமார் தலைமையில் நடைபெற்றது. பொது மருத்துவம், எலும்பு முறிவு, இதயம், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. முத்தவல்லி அப்துல் ரகுமான், லயன் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் இராமராஜ், வட்டாரத் தலைவர் கார்த்திக், தலைவர் நெடுஞ் செழியன், செயலாளர் மணிகண்டன், ரமேஷ், மருத்துவ அலு வலர்கள் வெங்கடேசன், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.