புதுக்கோட்டை, ஜூலை 9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்களுக்கான சிறப்புப் பேரவை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. பேர வைக்கு மாவட்டத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே.நாடியம்மை முன் னிலை வகித்தார். மாவட்டச் செயலா ளர் டி.சலோமி தொடக்கவுரையாற்றி னார். பேரவையில் கலந்துகொண்டு ‘ஸ்தாபன்-அரசியல்’ என்ற தலைப் பில் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி, ‘மாதர் சங்க வரலாறு’ என்ற தலைப்பில் மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், ‘புதுக்கோட்டை மாவட்ட ஸ்தாபனம்’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் டி.தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்ட துணைச் செய லாளர் பி.இளவரசி வரவேற்க, மாவட் டப் பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி நன்றி கூறினார். பேரவையில் நூற் றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்றனர்.