states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

அமெரிக்காவின் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி சம்பாதித்ததை செபி ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், 2023 முதல் 2025 வரையிலான அதன் மோசடிகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தநிறுவனம் கடந்த நான்கரை ஆண்டுகளில் சட்டவிரோத லாபத்தை அமெரிக்காவுக்கு அனுப்புவதை செபியும், ஒன்றிய அரசும் தடுக்காதது ஏன்? 

முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா

மக்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்குவது அரசின் வேலை. அது தேர்தல் ஆணையத்தின் பணியல்ல. பொதுமக்களின் குடியுரிமையை சோதித்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது முறையல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள் உள்ளன. 

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

பீகாரில் தற்போதைய செயல்முறை சில சமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மற்றும் வாக்களிக்கும் உரிமை இரண்டையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைக்க முயல்கிறது.

பத்திரிகையாளர் ராணா அயூப்

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த நாட்டில் மனித உயிர்கள் மலிவானவையாக உள்ளது. தினமும் மதரீதியான அணிதிரட்டல்கள் நடக்கும் போது இதற்கு யார் பொறுப்பேற்பது?