tamilnadu

img

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாட்டாளி வர்க்க எழுச்சி 25 கோடி தொழிலாளர் வேலைநிறுத்தம்

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாட்டாளி வர்க்க எழுச்சி 25 கோடி தொழிலாளர் வேலைநிறுத்தம்

மோடி அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆவேசப் போராட்டம்

புதுதில்லி, ஜூலை 9 -  இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்குப் பிறகு மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக, புதனன்று (ஜூலை 9) நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் ஒன்றுபட்டு பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட னர். பத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்த இந்த வேலைநிறுத்தம், மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கை களுக்கும், நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கும் எதிரான மிகப்பெரிய எதிர்ப்பாக வரலாறு படைத்தது.

முழுமையான பாதிப்பு : பொருளாதார முடக்கம்

இந்தப் பொது வேலைநிறுத்தம் இந்தியாவின் முக்கிய பொருளாதார துறைகளைத் தாக்கியது என்றால் மிகை யல்ல. நாட்டின் முக்கிய துறைகளான சுரங்கம், எஃகு, அலுமினியம், நெசவு, பெட்ரோலியம், வங்கி, அஞ்சல், போக்குவரத்து, கட்டுமானம், துறை முகம் ஆகிய அனைத்து துறைகளி லும் முழுமையான வேலைநிறுத்தம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறையில் பாதிப்பு

நாடு முழுவதும் பொது மற்றும் தனி யார் போக்குவரத்து சேவைகள் கணிச மாக முடங்கின. ரயில் சேவைகள் பல  இடங்களில் நிறுத்தப்பட்டன. விமான நிலையங்களில் ஸ்தம்பிப்புநிலை ஏற்பட்டது. வங்கி மற்றும் அஞ்சல்  சேவைகள் முழுமையாக பாதிக்கப் பட்டன.

கேரளம் - முழு அடைப்பு

கேரளத்தில் வேலைநிறுத்தம் “முழு அடைப்பு” நிலையை அடைந் தது. மாநிலத்தின் அனைத்து நட வடிக்கைகளும் முற்றிலும் நின்று போயின. தனியார் மற்றும் பொது போக்குவரத்து, நீண்ட தூர பேருந்து சேவைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தின் வேலைநிறுத்த தடை உத்தரவையும் தாண்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  திருவனந்தபுரத்தில் எம்.ஜி. சாலை முற்றிலும் வெறிச்சோடியது. கோழிக்கோடு மாவட்டத்தில் சாதாரண வாழ்க்கை முற்றிலும் முடங்கி யது. எர்ணாகுளம் மாவட்டத்திலும் இதே நிலைமை நிலவியது.

கர்நாடகம் - தொழில்துறை மையங்களில் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தம், முழு அடைப்பாகமாறியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைமையில் பல்லாயிரக்கணக் கானோர் மாநிலம் முழுவதும் ரயில் பாதைகளை முற்றுகையிட்டனர். கொல்கத்தா துறைமுகத்தில் அதானி நிறுவனம் பொது-தனியார் கூட்டு மாதிரியில் நடத்தும் கொள்கலன் முனையத்தின் முழு நடவடிக்கையும் நின்று போனது. இந்த முனையத்தின் அனைத்து தொழிலாளர்களும் கொல்கத்தா துறைமுக மஸ்தூர் யூனி யன் (சிஐடியு) உறுப்பினர்கள் ஆவர். இது கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான நேரடி அடியாகும். மேற்குவங்கத்தின் முழு சணல் ஆலைத் துறையிலும் முழுமையான வேலைநிறுத்தம் நடைபெற்றது. துர்காபூர் முதல் பாரக்பூர் வரை, லால்கோலா முதல் டயமண்ட் ஹார்பர்  வரை ரயில் பாதை முற்றுகைகள் நடைபெற்றன. தெலுங்கானா - தீவிர தொழில்துறை முடக்கம் தெலுங்கானாவில் வேலை நிறுத்தம் மிகுந்த தீவிரத்துடன் நடை பெற்றது. ஹைதராபாத்தில் சிஐடியு, டியுசிஐ, ஏஐயுடியுசி ஆகிய அமைப்பு களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பாகலிங்கம்பள்ளி யில் இருந்து தொடங்கி சிக்கட்பள்ளி வரை பெரும் பேரணி நடத்தினர். சிவப்பு கொடிகளின் கடல் ஹைதரா பாத் வீதிகளை மூடியது எனலாம். சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தில் 100% வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேடக் வெடிமருந்து - ஆயுதத் தொழிற் சாலையிலும், சார்மினார் மதுபான ஆலையிலும் முழு வேலைநிறுத்தம். மேடக்கில் சிஐடியு சார்பில் பைக் பேரணி நடத்தினர். ஹைதராபாத்தின் வெளியே டிரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டன. தினக்கூலி தொழிலாளர்கள் கடைகள் மூடப்பட்டிருந்ததால் காத்திருந்தனர்.

கர்நாடகம் - தொழில்துறை மையங்களில் பாதிப்பு

பெங்களூருவில் சுதந்திரப் பூங்கா வில் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் கூடி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற் றனர். ஆனால் நகரின் போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் நடை பெற்றன. மைசூருவில் தொழில்துறைஉற்பத்தியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு  இல்லை.  ஹுப்ளியில் ஜேசிடியு உறுப் பினர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடக தங்க சுரங்கங்களில் முழு வேலைநிறுத்தம் நடைபெற்றது.

அசாம்-வடகிழக்கின் எதிர்ப்பு அலை

அசாமில் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். வணிக வாக னங்கள் சாலைகளில் இருந்து விலகி யிருந்தன. பேருந்துகள் மற்றும் டிரக்கு களும் ஓடவில்லை. பள்ளி பேருந்து கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் மட்டும் இயங்கின. அமீன்கான் தொழிற் பேட்டையின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டது. இந்த மாநிலத்தில் தீவிர வலதுசாரி பாஜக அரசு இருப்ப தால் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரா - பொருளாதார மையத்தில் பாதிப்பு

மும்பையில் வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தத்தில் இணைந்தனர். இது நாட்டின் பொருளாதார மையமான மும்பையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது. பாந்துப்பில் உள்ள சியட் (CEAT) டயர் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்தி யது. தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிற மாநிலங்களில் பாதிப்பு

ஒடிசா: புவனேஸ்வரில் சிஐடியு  கோர்தா மாவட்ட பிரிவு உறுப்பினர்கள் பாரத் பந்த்திற்கு ஆதரவாக தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டனர். பீகார்: ஜெஹானாபாத் ரயில் நிலை யத்தில் பிஜு ஜனதா தளத்தின் (RJD) மாணவர் பிரிவு உறுப்பினர்கள் ரயில் பாதையை முற்றுகையிட்டனர். திரிபுரா: மாநிலத்தில் பந்த் போன்ற  நிலைமை நிலவியது. இடதுமுன்னணி சார்பில் வேலைநிறுத்தப் பேரணி - போராட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு- காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், மேகா லயா, நாகாலாந்து, சத்தீஸ்கர்: இந்த மாநிலங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. துறைவாரியான வேலைநிறுத்தம் நிலக்கரி துறை: நிலக்கரி இந்தியா லிமிடெட் மற்றும் அதன் அனைத்து துணை நிறுவனங்களிலும் முழு வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது நாட்டின் மின்சார உற்பத்தியை கடுமையாக பாதித்தது. மின்சார உற்பத்தி: மத்திய அனல் மின் நிலையங்களில் (NTPC) வேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெற்றது. போங்கைகான் என்டிபிசி நிலையத்தில் முழு வேலைநிறுத்தம்; மத்திய மின் தொகுப்பு (Power Grid) நிலையங்களி லும் வேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெற்றது. பெட்ரோலியத் துறை: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் முழு வேலைநிறுத்தம் தொடங்கியது. கொச்சி பிபிசிஎல் வாயிலில் வசதியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுமினியம் துறை: சத்தீஸ்கரின் பலோடில் பாரத் அலுமினியம் லிமிடெட்டில் பொது வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. தங்க சுரங்கங்கள்: கர்நாடகத்தின்  தங்க சுரங்கங்களில் முழுவேலை நிறுத்தம் நடைபெற்றது. துறைமுகங்கள்: கொல்கத்தா, தூத்துக்குடி, கொச்சி, பாரதீப் துறை முகங்களில் வேலைநிறுத்தம் நடை பெற்றது. இது இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. மேடக் ஆர்டினன்ஸ் தொழிற்சாலை, (தெலுங்கானா) உள்ளிட்ட ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. திருச்சி மற்றும் ராணிப்பேட்டை பெல் நிறுவனங்களில் முழு வேலைநிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், காப்பீட்டு ஊழியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.  

அங்கன்வாடி ஊழியர்களின் எழுச்சி

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் மிகப்பெரும் சக்தியாக ஈடுபட்டனர். இது அரசின் சமூக நலத் திட்டங்களில் பணிபுரியும் ‘திட்ட தொழிலாளர்களின்’ நிலையை முன்னிலைப்படுத்தியது.

ஒற்றுமையின் சக்தி

ஜூலை 9 வேலைநிறுத்தம் வெறும் தொழிலாளர் போராட்டம் மட்டுமல்ல, இது சமூக நீதிக்கான, மனித கண்ணியத்திற்கான, பொரு ளாதார சமத்துவத்திற்கான மாபெரும் போராட்டம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, கொல்கத்தா முதல் மும்பை வரை, ஒரே நேரத்தில் 25 கோடி தொழிலாளர்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்பியது உலக வரலாற்றில் அரிதானது ஆகும். இந்த வேலைநிறுத்தம் இந்தியா வின் தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியாக விழித்துக்கொண்டிருப்பதை காட்டியது. நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளி முதல் பெங்க ளூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வரை, அனைவரும் ஒரே குரலை எழுப்பினர்.

பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றது மிகவும் முக்கியமானது. இவர்கள் பெரும்பாலும் பெண்கள், குறைந்த ஊதியம் பெறுபவர்கள், சமூக பாதுகாப்பு இல்லாதவர்கள். அவர்களின் போராட்டம் “திட்ட தொழிலாளர்கள்” என்ற பெயரில் சுரண்டப்படும் கோடிக்கணக்கான இந்திய பெண்களின் குரலாக, வேலைநிறுத்தக் களத்தில் பெரும் சக்தியாக வெளிப்பட்டது. நாடு முழுவதும் இந்தப் போராட்டத் திற்கு தொழிலாளி வர்க்கத்துடன் விவ சாய வர்க்கமும் துணை நின்றது. அனைத்துப் பகுதிகளிலும் நடை பெற்ற போராட்டங்கள், மறியல் உள்ளி ட்ட இயக்கங்களில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி முழுமையாக பங்கேற்றது. இத்தகைய சிறப்பு அம்சங்களை பெருமிதத்துடன் குறிப்பிட்டு சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்களின் தலைவர்கள் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.