பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபருக்கு பாஜகவுடன் தொடர்ப
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபருக்கு பாஜகவுடன் தொடர்பு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப் பட்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாஜக தலைவர்க ளுடன் கொண்டுள்ள தொடர்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட ஆறு பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். இவர் தனது பயண அனுபவங்களை ‘இந்தியப் பெண் பாகிஸ்தானில்’ என்ற தலைப்பில் தொடர் வீடியோக்களாகப் பதிவிட்டு வந்துள்ளார். பாஜக தலை வர்கள் முன்னாள் அமைச்சர்கள் உடன் அவர் இருக்கும் பழைய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீடியோவில், ஜோதி மல்ஹோத்ரா, வாகா-அட்டாரி எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன், பாதுகாப்பு சோதனையில் ஈடு பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வீர ரிடம் தனது பாஸ்போர்ட்டைக் கொடுத்து விட்டு, ‘நான் அரியானா பாஜகவைச் சேர்ந்தவர்’ என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் தனது பயணத்தி ற்கு ஆளுங்கட்சியின் பெயரை ஏன் பயன்படுத்தினார்? அவர் அவ்வாறு பேசுவதற்கு, அவருக்கு பின்னால் உள்ள பாஜக தலைவர்கள் யார் என கேள்வி கள் எழுந்துள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன் கேரளாவில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவின்போது அப்போதைய ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரனுடன், ஜோதி மல்ஹோத்ரா இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அழைப்பி தழ் உள்ளவர்கள் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க முடியும் என்ற கடு மையான விதி இருந்த நிலையில் அதில் ஜோதி எப்படிப் பங்கேற்றார் எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.