தமிழ்நாட்டில் 1 கோடிப் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு!
ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் - பல்லாயிரக்கணக்கானோர் கைது
சென்னை, ஜூலை 9 - தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமை களைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நான்கு புதிய சட்டத் தொகுப்புக்களை எதிர்த்து, சிஐ டியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்ச ங்கங்களின் நாடு தழுவிய அளவில் நடத்திய பொது வேலைநிறுத்தம், தமிழகத்திலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் 1 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன. இதில், விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளை ஞர்கள், மாணவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று கைதாகினர். தலைநகர் சென்னையில், அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் நிலையம் அருகே 13 தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் அ. சவுந்தர ராசன் (சிஐடியு), எம். ராதாகிருஷ்ணன் (ஏஐடி யுசி), கி. நடராசன் (தொமுச), ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), உள்ளிட்ட பல்வேறு சங்கங் களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காப்பீடு - வங்கி ஊழியர்கள்
வங்கி - காப்பீட்டு ஊழியர்கள் இணைந்து சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அகில இந்திய காப்பீட்டு ஊழி யர் சங்கத்தின் தலைவர் வி. ரமேஷ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எச். வெங்கடாச்சலம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். காப்பீட்டுத்துறையில் பணி யாற்றும் ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரும், வங்கி ஊழியர்களில் 80 சதவிகிதத்தினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வருமான வரித்துறையில் 100 விழுக்காடு வேலைநிறுத்தம் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகமான ‘ஆயக்கர் பவன்’ மூடிக் கிடந்தது. “தமிழகத்தில் உள்ள 3500 ஊழியர் கள் உள்ளிட்டு நாடு முழுவதும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று ள்ளனர்” என்று வருமானவரி ஊழியர் சம்மேள னத்தின் அகில இந்திய தலைவர் எம்.எஸ். வெங்கடேசன் கூறினார்.
ஜாக்டோ - ஜியோ
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில், அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் பங்கேற்றனர். சென்னை எழிலகத்தில் ஆர்ப்பா ட்டத்திலும் ஈடுபட்டனர். மாநில ஒருங்கி ணைப்பாளர் கு. வெங்கடேசன், அ. மாய வன், காந்திராஜ், சோ. சுரேஷ், தியாகரா ஜன், டானியல் ஜெயசிங், பொன்னிவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தில் 90 விழுக்காட்டினர் கலந்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை
ஓசிஎப் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல்
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வெகு ஜன அமைப்புகள், அனைத்து மாவட்டத் தலை நகரம் மற்றும் வட்டார தலை நகரங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களை நடத்தி னர். ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்ட னர். இதில், பல்லாயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு விவசாயிக ள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்தி ரன், பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், பொரு ளாளர் கே.பி. பெருமாள்; அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. லாசர், மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், பொருளாளர் அ. பழனிசாமி; அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன்; இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமையேற்றனர்.
காவல்துறை அராஜகம்
மறியல் போராட்டங்களின் போது, பல இடங்களில் காவல்துறையினர் கெடுபிடியில் ஈடுபட்டதுடன், அராஜகமாகவும் நடந்து கொண்ட னர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் ஆட்டோ தொழிலாளர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். குறிப்பாக, விழுப்புரம் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது, ஏடிஎஸ்பி தினகரன் உத்தர வின் பேரில் காவல்துறையினர் காட்டுமிராண்டி த்தனமாக தடியடி தாக்குதல் நடத்தினர். சேகர், முருகன், பிரகாஷ், மதன்ராஜ் உட்பட பலர் காயமடைந்த நிலையில், அவர்களை மருத்துவ மனையில் ஓ.பி. சீட்டு இல்லாமலேயே சிகிச்சையளித்து அழைத்து வந்துள்ளனர். இராமநாதபுரத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி மீது காவல்துறை நடத் திய தள்ளு-முள்ளுவில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.