tamilnadu

img

கோவை குண்டு வெடிப்பு - 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜா (48) என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவர் தையல் ராஜா(48) என்கின்ற ராஜா.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த ராஜா, ஆல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். 1998-ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்த இவர்,  1996-ஆம் ஆண்டு நாகூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் மற்றும் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் 1996-97 காலகட்டத்தில் மேலும் இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.
இவர் 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பின் போது, வள்ளல் நகரில் வாடகை வீடு எடுத்து, அங்கு குண்டுகள் தயாரித்துச் சேமித்ததாகவும், பிப்ரவரி 12 முதல் 14 வரை ஆல்-உம்மா அமைப்பின் தொண்டர்களுக்குக் குண்டுகளை விநியோகித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது
இந்நிலையில் 27 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த  ராஜா கர்நாடகாவில் இருப்பதாகக் கிடத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கோவை போலீசாரால் நேற்று அவரை கர்நாடகாவில் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.