குடவாசல், மே 12-குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கம் சார்பாக அகவிலைப்படி 3ரூ உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க குடவாசல் வட்டத் தலைவர் சி.சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி சங்க மாவட்ட துணை தலைவர் எம்.ராஜமாணிக்கம் பேசினார். வருவாய்த்துறை மாநில இணைச் செயலாளர் எஸ்.கணேசன், வருவாய்த் துறையின் கிராம ஊழியர் சங்க வட்டத் தலைவர் எம்.முருகையன் மற்றும் பல்வேறு துறை சார்பாக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அன்பழகன் நன்றி உரையாற்றினார்.