குடவாசல், ஜூலை 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூர் கிளை செயலாளர் பி.மருதராஜ் சகோதரர் பி.செல்வராசு படத்திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வேடம்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் ஏ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மறைந்த தோழர் செல்வராசு படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய செயலாளர் என்.ராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் வாசு கலியபெருமாள் பூசை யன் வலங்கைமான் நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.