குடவாசல், மே 22- குடவாசல் அருகே உள்ள அன்ன வாசலில் சிபிஎம் கிளைச் செயலாளர் விஜயன் படத்திறப்பு விழா நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினரும், அன்னவாசல் சிபிஎம் கிளை செயலாளருமான விஜயன், மே 7-ஆம் தேதி அகாலமரணம் அடைந்தார். இவருக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. ஒரு குழந்தையும் உள்ளது. தோழரின் இழப்பு அவர் குடும்பத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களு க்கும் மிகப்பெரிய இழப்பாகும். இந்நிலையில், விஜயனின் படத்திறப்பு விழா ஞாயிறன்று அன்னவாசல் உள்ள அவர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு படத்தினைத் திறந்து வைத்தார். நிகழ்வில் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர், அன்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் என்.சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.