புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே உள்ளாட்சி தொழிலாளர்களின் உற்ற தோழர் ப.சண்முகம் படத்திறப்பு விழா நடை பெற்றது. ஊரக உள்ளாட்சி மாவட்ட தலைவரும், சிஐடியு மாவட்ட தலைவருமான முகம்மதலி ஜின்னா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ப.சண்முகம் படத்தினை திறந்து வைத்தார்.