tamilnadu

img

விடத்தலாம்பட்டியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16- திருச்சி மாவட்டம் மணப் பாறை ஒன்றியத்தில் 1வது வார்டு விடத்தலாம்பட்டியில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் சுப்பிர மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுப்பிரமணியன், சிபிஎம் வட்ட செயலாளர் ராஜகோ பால், வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் பேசி னர். வட்டக்குழு உறுப்பினர் கள் ஷாஜகான், மூத்த தோழர் இளமாறன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். நடேசன் நன்றி கூறினார்.