செங்கல்பட்டு, ஆக 22- செங்கல்பட்டு மாவட்டத் தில் சலவை தொழிலாளர் களின் வாழ்வாதார கோரிக் கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மகாத்மா காந்தி சலவை தொழிலாளர் கள் நல சங்கம் சார்பில் மாவட்ட பொதுச் செயலா ளர் கண்ணதாசன் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் திங்களன்று (ஆக 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சலவை தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சலவைப் பெட்டி வழங்கிட வேண்டும், சலவைத் தொழி லாளர்கள் 66 குடும்பங்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண் டும், நலவாரிய பயன் களை உடனுக்குடன் பயனாளிகளுக்கு பெற்றிட வழிவகை செய்ய வேண்டும், சலவை தொழி லாளர்கள் குடும்பப் பிள்ளை களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும், மாவட்ட அளவில் செங்கல்பட்டில் சலவை தொழிலாளர்களுக்கு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்துப் பட்டது. கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சி யின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக ராட்டிணங் கிணறு பகுதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக் களை வழங்கினர்.