districts

img

சாதிச் சான்றிதழ், அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை மனு

தஞ்சாவூர், நவ.21-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், திங்களன்று நடைபெற்ற பொதுமக்  கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு  அளித்தனர்.  முறைசாராத் தொழிலாளர்கள் சங்க  மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்  வார் தலைமையில், சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செய லாளர் கே.அன்பு ஆகியோர் வழிகாட்டுத லில் பல்வேறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
மதுக்கூரில் அடிப்படை வசதி தேவை 
மதுக்கூர் பேரூராட்சி மௌலானா தோப்பு பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக் கன் பழங்குடி சமூகத்தினர், மதுக்கூர் பேரூ ராட்சி வார்டு உறுப்பினர் கோமதி தலைமை யில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  ‘‘தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் பேரூராட்சி 10-ஆவது வார்  டில் உள்ள மௌலானாத் தோப்பில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி யினருக்கான உரிமைகள் நிராகரிக்கப் பட்டுள்ளது.  இப்பகுதியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். அதில் ஒரு பகுதியினருக்கு மட்டும் கழிப்பறை வசதி, மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி என அமைத்து கொடுக்  கப்பட்டுள்ளது.  ஆனால், 75க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வாழும் காட்டுநாயக்கர் பழங்குடியின சமுதாய மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி, குடி நீர் தொட்டி, மயான பாதைக்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
பூண்டி - சாதிச் சான்றிதழ் 
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த  பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சிஐடியு நிர்வாகிகள் தலை மையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.  அதில், ‘‘எங்கள் பகுதியில், பெற்றோர கள் சிலருக்கு இந்து ஆதியன் என சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களில் பலருக்கு இந்து ஆதியன் என சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.  அதிகாரிகள் எங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இத னால், பள்ளி மாணவ, மாணவிகள் மேற்  படிப்புக்கு செல்லவும், அரசின் சலுகை களை பெறவும், சிரமப்படும் நிலை உள்  ளது  எனவே, மாவட்ட ஆட்சியர் மாவட்டத் தின் மற்ற பகுதிகளில் வழங்கி இருப்பது  போல், எங்கள் பகுதிகளிலும் ஆய்வு செய்து, வருவாய் கோட்டாட்சியர் மூலம்  இந்து ஆதியன் சாதிச் சான்றிதழ் வழங்கி  எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்’’ என  கூறப்பட்டிருந்தது.  இதுகுறித்து, ஆட்சியர் கூறுகையில், விரைவில் ஆய்வு நடத்தி, ஒரு மாத காலத்  திற்குள் ஆர்டிஓ மூலம் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்  றார்.