districts

img

மீள் குடியேற்ற குடியிருப்புப் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

வேதாரண்யம், அக்.6- நாகப்பட்டினம் மாவட் டம் காடந்தேத்தியில் மீள்  குடியேற்ற மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அடிப்  படை வசதிகள் செய்து தரா ததை கண்டித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மக்களு டன் இணைந்து சாலை மறி யலில் ஈடுபட்டது. வேதாரண்யம் அடுத்த  தலைஞாயிறு காடந்தேத்தி யில் மீள் குடியேற்ற மக்கள் 190 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காடந்தேத்தி பாரதி நகர் பகுதிக்கு குடி நீர், மயானசாலை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் இது வரை செய்து தரவில்லை.  இதைக் கண்டித்து குடி யிருப்பு மக்கள்,  கம்யூ னிஸ்ட் கட்சி தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமையில்  காடந்தேத்தி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் மற்  றும் ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்த தால், சாலை மறியல் கை விடப்பட்டது.