tamilnadu

img

கிராமப்புற செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமனம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

கிராமப்புற செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமனம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை 28 - தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை வள்ளு வர் கோட்டத்தில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலி யர் மற்றும் வாழ்நாள் சாதனை யாளர் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன், இந்த ஆண்டு 22  செவிலியர்களுக்கு ‘நைட்டிங் கேல் அம்மையார் விருது’ வழங்கப்பட்டுள்ளதாக தெரி வித்தார்.  கொரோனா காலத்தில் செவிலி யர்கள் 2,300 மலைக்கிராமங்கள் மற்றும் நடந்து செல்லக் கூட வழி யில்லாத இடங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டதை பாராட்டினார். “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3,253 ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ததோடு, ஒப்பந்த செவிலியர்களின் மாத ஊதியத்தை 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்.  தற்போது 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 150 செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2,250 கிராமப்புற சுகாதார நிலையங்களில் பணி யாற்றும் செவிலியர்களுக்கு மிக விரைவில் பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன” என்றும் தெரிவித்தார்.