districts

img

பேருந்து வசதி கேட்டு சாலை மறியல்

வேலூர், அக். 10- வேலூர் அடுத்த கீழ்மொணவூரில் உள்ள  மாணவர்கள் வேலூரில் உள்ள பள்ளி  கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மாண வர்கள் வசதிக்காக கீழ்மொணவூரிலிருந்து வேலூருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பேருந்து இயக்கப் பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த  பேருந்து இயக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் திங்களன்று (அக். 10) சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர் களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டாட் சியர் திவ்யா, போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.