கிருஷ்ணகிரி, நவ. 10- ஓசூர் வட்டம் கெலவரப்பள்ளி ஊராட்சியில் பல தலைமுறைகளாக உள்ள சித்தன்னபள்ளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுடுகாட்டிற்கு என அரசு நிலம் ஒதுக்கித் தர வில்லை. இதனால், இந்த பகுதி யில் இறந்தவர்களை அவர் அவர் சொந்த நிலங்களிலும் நிலம் இல்லாத வர்கள் ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்களிலும் புதைத்து வருகின்றனர். சுடுகாட்டிற்கு நிலம் ஒதுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதிகாரி களிடம் பல முறை மனு அளித்து மறியல் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், கூலி வேலை செய்து வரும ராஜப்பா ரத்னா என்பவரின் மகன் பிரேம்குமார் சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்த குடும்பத்திற்கு சொந்த நிலம் இல்லாமல் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பெற்றோர் தவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓசூர் ஒன்றியச் செய லாளர் ராஜா ரெட்டி, கிராம மக்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஓசூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலு வலர், கெலவரப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் புட்டாரெட்டி ஆகி யோர் போராட்ட களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரேம் குமார் உடலை புதைப்பதற்கு இடம் ஒதுக்கியதோடு, சித்தனபள்ளி கிராம சுடுகாட்டிற்கு தனியாக நிலம் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தனர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கிளைச் செய லாளர்கள் மரிரெட்டி, ஆனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.