கமல்ஹாசன் எம்.பி.க்கு வாழ்த்து!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.