tamilnadu

img

‘அறம்’ நிறுவனர் பிறந்த நாள் விழா

திருச்சிராப்பள்ளி, மே 16- திருச்சியில் வெள்ளியன்று அறம் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவத்தலைவர் டாக்டர் சு.ராஜாவின் 47-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சு.ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவை நிறுவன தலைவர் ராஜா தொடங்கி வைத்தார்.  சங்கத்தின் மாநில நிர்வாகிகள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.