districts

img

மணியம்மையார்  பிறந்த நாள் விழா  

தஞ்சாவூர், மார்ச் 11-  தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மணி யம்மையாரின் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பல்கலை., துணை வேந்தர் செ.வேலுச் சாமி தலைமை வகித்தார். பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா  முன்னிலை வகித்தார். ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.அன்பு ராஜ் தலைமையில் பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  இதில் சே.மெ.மதிவதனி, பேராசிரியர் நர்மதா, கல்வி  புல முதன்மையர் ஜார்ஜ், புல முதன்மையர் செந்தில் குமார், பெரியார் சிந்தனை உயராய்வு மைய இயக்கு னர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.