tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி....

ஜூலை 15ந் தேதி தோழர் என். சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்தநாளையொட்டி கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் வாழ்த்துவதற்காக வருகை தருகிறார். அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் / பிரமுகர்கள் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை வாழ்த்து தெரிவிக்க உள்ளார்கள். ஏற்கனவே அறிவித்துள்ள படி, கட்சி தோழர்களும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென்றும், நேரடியாக வருவதை தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.