நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குமரி மாவட்ட சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கம் இணைந்து வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் ஜோசப்தலைமை தாங்கினார். மருத்துவர் டி.கே.நாகேந்திரன் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கபசுர குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகளை பங்குபணியாளர் வில்சன் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், தங்கமோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, சந்திரகலா, தையல் கலைஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஐடா ஹெலன், அந்தோணி அம்மாள், தாசம்மாள் உள்பட பலர் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சியில் 600-க்கு மேற்பட்டவர்களுக்கு கபசுர குடிநீரும், 300-க்கு மேற்பட்டவர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளும் வழங்கப்பட்டன.