யுபிஎஸ்சி தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த ப்ரீத்தி சுதநின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், புதிய யுபிஎஸ்சி தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் ஐடி, மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், 2019 ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 2022 அக்டோபர் 31 ஆம் தேதி வரை பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்துள்ளார்.