tamilnadu

img

தோழர் எம்.உடையப்பனுக்கு கறம்பக்குடியில் புகழஞ்சலி

தோழர் எம்.உடையப்பனுக்கு கறம்பக்குடியில் புகழஞ்சலி 

எம்.சின்னதுரை எம்எல்ஏ., பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கறம்பக்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் எம். உடையப்பனின் 5-ஆம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்வு கறம்பக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், துரை.அரிபாஸ்கர், ஏ.லாசர், எவரெஸ்ட் கே.சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முகமதுஜான், சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பி. வீரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.