tamilnadu

img

முழு நிலவு சிலம்பு விழா 16 ஆம் ஆண்டு இலக்கிய பெருவிழா

முழு நிலவு சிலம்பு விழா  16 ஆம் ஆண்டு இலக்கிய பெருவிழா 

பொன்னமராவதி முத்தமிழ் பாசறை சார்பில் 

பொன்னமராவதி, மே 13-  பொன்னமராவதி முத்தமிழ் பாசறை சார்பில், முழு நிலவு சிலம்பு விழா மற்றும் 16 ஆம் ஆண்டு இலக்கிய பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு முத்தமிழ் பாசறை அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவேலு தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் பாலமுரளி, நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று, சிறந்த தமிழ் பணியாற்றிய பேராசிரியர் அழகம்மை, பாலசுப்ரமணியன், ஆசிரியர் பயிற்றுநர் பசுபதி ஆகியோருக்கு தமிழ் சுடர் வழங்கியும், அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாசறை பட்டயம் வழங்கியும் பேசினார்.  மேலும், இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், கண்ணகி ஆகியோர் உருவப் படங்கள் திறக்கப்பட்டன. இரண்டாம் அமர்வில் 16 ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழா, விழாக் குழுத் தலைவர் கருப்பையா தலைமையில் நடந்தது.  செயலாளர் தேனப்பன் வரவேற்றார். நாஞ்சில் சம்பத் நடுவராக கலந்து கொண்டு “கலை நயமும், கதை நலனும் மிகுந்து காணப்படுவது புகாரிலே, மதுரையிலே” என்ற தலைப்பில் விவாதக் களம் நடைபெற்றது.  விழாவில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், திமுக ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, முத்தமிழ் பாசறை அறக்கட்டளை தலைவர் மாணிக்கவேலு, செயலாளர் நெ.ரா. சந்திரன் பொருளாளர் சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.