உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய், இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-இல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.
கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு, பட்டியலின சமூகத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் 2ஆவது நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.