tamilnadu

img

விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 5- கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.7500 வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக்கி சட்டக் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.கலைமணி தலைமையேற்றார். செயலாளர் ஆர்.குமாரராஜா, பொருளாளர் என்.பாலய்யா, மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.மாரியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் பி.கந்தசாமி, கே.எம்.லிங்கம், ஆர்.மணியன், எம்.மணி, ஒன்றிய செயலாளர் எஸ்.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ப்பட்டது. 

திருவாரூர் ஆட்சியர் அலு வலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.இராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் உ.சண்முகம் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் நிறைவுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் சி.பிரகாஷ் நன்றி கூறினார். 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களைக் கண்டித்தும், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரையாற்றினார். இந்தியத் தொழிற்சங்க மையம் சார்பில் எஸ்.ஆர்.ராஜேந்திரன் உரையாற்றினார். நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி கூறினார்.