திருச்சிராப்பள்ளி, நவ.13- ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 7வது ஊதியக்குழு அரசாணை யின்படி ஊதியம் மற்றும் நிலு வைத் தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் பணி பதிவேடு பராமரிக்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய ரூ.350 வழங்க வேண்டும். 2000-த்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் செவ் வாயன்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பழனி யாண்டி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், உள்ளாட்சி ஊழியர்கள் சங்க தலைவர் பழனிவேல், மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர். உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலா ளர் சுப்பிரமணி நன்றி கூறி னார்.