tamilnadu

ஜன.8 போராட்டத்தில் பங்கேற்றதால் 20 துப்புரவு தொழிலாளர்கள் பணி நீக்கம்

மீண்டும் வேலை வழங்கக் கோரி மனு 

திருச்சிராப்பள்ளி, ஜன.13- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா, செயலாளர் மாறன், நிர்வாகி டோம்னிக்,  பொருளாளர் விஜயன் ஆகியோர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், அரியமங்கலம் கோட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த துப்புரவு தொழிலாளர்கள் இதுசமயம் சுயஉதவிக்குழு அடிப்படை யில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை செய்த தொழிலாளர்களை இனி நீங்கள் வேலைக்கு வர வேண்டாம் என வாய்மொழியாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறி 17 தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அரியமங்கலம் கோட்ட மாநகராட்சி நிர்வாகம், 17 தொழிலாளர்களுக்கும் ஜனவரி 8 ஆம் தேதியன்று இவர்கள் அகில இந்தியநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர் எனக் கூறி வேலையை விட்டு நிறுத்தி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சுயஉதவிக்குழு அடிப்படையில் கடு மையான மழை மற்றும் கோடைக்காலங்களில் அர்ப்பணிப்போடு பணிபுரிந்த தொழிலாளர்களை பழிவாங்கும் விரோத மனப் பான்மையோடு அரியமங்கலம் கோட்ட மாநகராட்சி நிர்வாகம் நடந்துள்ளது.  இதே போன்று சத்திரம் பேருந்து நிலைய துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. வேலை மறுக்கப்பட்டால் அவர்கள் வாழ்வதற்கு வழி இல்லை. நிறுத்தப்பட்ட 20 தொழிலாளர்களில் 17 பேர் பெண்கள் என்பதாலும் தொடர்ந்து வேலை இழந்தால் அவர்களது வாழ் நிலை பாதிக்கப்படும் என்பதாலும் மாவட்ட ஆட்சியர், இவர்க ளுக்கு வேலை வழங்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்திருந்தனர்.