tamilnadu

img

இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டம்... ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டதற்காக திருச்சி மாநகராட்சியில் 20 துப்புரவு தொழிலாளர்கள் வேலைநீக்கம் வேலை வழங்கக் கோரி

திண்டுக்கல்:
மத்திய அரசின் தாராளமய கொள்கை களை எதிர்த்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், பணிநிரந்தரம், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8-1-2020 அன்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி முறையாக வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு திருச்சி மாநகராட்சியில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட காரணத்திற்காக திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம், காந்திமார்க்கெட்டில் பணிபுரிந்த 17 தொழிலாளர்களும், ஸ்ரீரங்கம் கோட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் பணிபுரிந்த 3 தொழிலாளர்களும் ஆகமொத்தம் 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 9-1-2020 முதல் வாய்மொழி உத்தரவின் மூலம் வேலை வழங்கப்படவில்லை. இதுசம்மந்தமாக மாநகராட்சி ஆணையரை ஊழியர்கள் மற்றும் சிஐடியு சங்க தலைவர்கள் பலமுறை சந்தித்து பேசியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் தலையிட வலியுறுத்தி சம்மேளனத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பழிவாங்கும் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி 4-2-20 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு ஆதரவாக தமிழக அரசு தலையிட வலியுறுத்தி அனைத்து மாநகராட்சி களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.