tamilnadu

img

2020 ஜனவரி 8 - அகில இந்திய வேலை நிறுத்தம்

மத்திய பாஜக அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து

  • அக், நவ. மாதங்களில் சிறப்பு மாநாடுகள்  
  • டிசம்பரில் விரிவான பிரச்சார இயக்கம்

மத்தியத் தொழிற்சங்கங்களின் தேசிய திறந்தவெளி வெகுஜன சிறப்பு மாநாடு அறைகூவல்

அனைத்து மத்தியத் தொழிற்சங் கங்களின் தேசிய மேடை சார்பில் செப்.30 அன்று  தலைநகர் புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் தேசிய திறந்த வெளி வெகுஜன மக்கள்திரள் சிறப்பு மாநாடு நடைபெற்றது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அனைத்து சங்கங்களும் இணைந்து கூட்டு சிறப்பு மாநாடுகள் நடத்துவது எனவும், டிசம்பர் மாதத்தில் விரிவான அளவில் பிரச்சாரங்களை எடுத்துச் செல்வது எனவும், 2020 ஜனவரி 8 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வது எனவும் அறைகூவல் விடுத்துள்ளது. சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகட னம் வருமாறு:

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், தன்னுடைய மோடி-2, நூறு நாள் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறது. அதே சமயத்தில், ஆட்சியாளர்களின் நடவடிக்கைக ளின் காரணமாக, நாடும், நாட்டு மக்களும் தொடரும் பொருளாதார மந்தம், வேலையிழப்பு கள், விண்ணை எட்டும் வேலையில்லாத் திண் டாட்டம், விரிவாகிக்கொண்டும், ஆழமாகிக் கொண்டிருக்கும் வறுமை, பெறுகின்ற வருமா னத்தின் சராசரி அளவு மிகவேகமாக வீழ்ச்சிய டைந்துகொண்டிருத்தல், நாட்டின் சொத்துக் களை மிகவும்  பொறுப்பற்ற முறையில் தனி யாருக்கும், அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்த்தல், நாட்டின் உற்பத்தி வல்ல மையைச் சீர்குலைத்து அழித்திடும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருத்தல், “எல்லோ ருடனும், எல்லோருக்காகவும்” என்று முழங்கிக் கொண்டே, நாட்டு மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வை மிகவும் மோசமான அளவிற்கு விரிவாக்கிக் கொண்டிருத்தல் முதலானவற்றை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சட்டங்களின் பேரில் தாக்குதல்

இப்போது, இத்தகைய நாசகர பொரு ளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களையும் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் பின் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவை நிலை மைகளை மேலும் மோசமாக்கிக் கொண்டி ருக்கின்றன.  முன்னெப்போதும் இல்லாத அள விற்கு மிகவும் ஜனநாயக விரோதமான முறையில், ஊதிய விதிகள் மசோதா (Wage Code Bill), தொழில்மையங்களில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் குறித்த சட்டம் அறிமுகப்படுத்தியிருத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்திடும் விதத்தில்  அதில் திருத்தங்க ளைக் கொண்டுவந்திருத்தல்,  சட்டவிரோத நட வடிக்கைகள் தடைச் சட்டத்தை மேலும் கொடூர மானதாக மாற்றக்கூடிய விதத்தில் திருத்தங்கள், ஜம்மு-காஷ்மீர் மக்களையோ அங்கே செயல் படும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை யோ கலந்தாலோசிக்காமல் (உண்மையில் அவர்களை சிறையிலடைத்து விட்டு) 370 ஆவது பிரிவை ரத்து செய்திருத்தல், அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு மூலமாக பல லட்சக்கணக்கானவர்களை வீடற்றவர்களாக வும், நாடற்றவர்களாகவும் மாற்றியிருத்தல் முத லானவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கி றார்கள். இப்போது, பாஜக ஆளும் மாநிலங்கள் இத்தகைய குடிமக்கள் பதிவேட்டு முறையை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்தப் போவ தாகக் கூறிக்கொண்டிருக்கின்றன. இக்குடி மக்கள் பதிவேட்டு முறை என்பது மக்களை மத அடிப்படையில் பிரிப்பதற்கான நடைமுறையே தவிர வேறல்ல. ஆட்சியாளர்களின் இத்தகைய நாசகர நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் ஒற்றுமை மூலமாக முறியடிக்கப்பட வேண்டி யவைகளாகும். 

2015 செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்,  2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தம், 2017 நவம்பர் 9-11 தேதிகளில் நாடாளுமன்றம் முன் நடைபெற்ற மூன்று நாட்கள் மகா முற்றுகைப் போராட்டம்,  2018 ஜனவரி 17 அன்று திட்ட ஊழியர்கள் (scheme workers) நடத்திய நாடு தழுவிய அள விலான வேலைநிறுத்தம், 2019 ஜனவரி 8-9 தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் வேலை நிறுத்தம் மற்றும் மாநிலங்கள் அளவில் பல்வேறு போராட்டங்கள் மூலமாக தொழிலாளர் கள் உயர்த்திப்பிடித்த 12 அம்சக் கோரிக்கை களை, மத்திய பாஜக அரசு கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை. ஜூலை 5ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோத பட்ஜெட்டாகவே முழுக்க முழுக்க அமைந்திருந்தது.  சமூகப் பாதுகாப்பு மீதான சட்டம் மற்றும் தொழில்துறை உறவுகள் மீதான சட்டம் என்று இரு சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இவையும் உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கான நிபந்தனைகளைத் தொழிலாளர்கள் மீது திணிப்பதற்கானவையே தவிர வேறல்ல.  

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்

மத்திய அரசு, தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியது மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் இதுநாள் வரையிலும் பல்வேறு போராட்டங்களின் மூலமாகப் பெற்ற உரிமைகளுக்கு எதிராகவும், தங்கள் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்வதற்காக, மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கி றது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகள், முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் என்பவைக்கு இவர்களின் ஆட்சியில் இடமில்லாமல் போய்விட்டது. தொழி லாளர் நலச் சட்டங்கள் எல்லாம் முதலாளிகள் நலச் சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின் றன. பாஜக அரசாங்கமானது, நாட்டின் மிகப் பெரும் மத்தியத் தொழிற்சங்கமான ஐஎன்டி யுசி-ஐ அனைத்துப் பிரதிநிதித்துவங்களிலி ருந்தும் பழிவாங்கும்விதத்தில் பறித்துக் கொண்டிருப்பது தொடர்கிறது. 2015 ஜூ லைக்குப் பின்னர் இந்தியத் தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference) எதுவும் நடைபெறவில்லை. பட்ஜெட்டுக்கு முன் தொழிற் சங்கங்களைக் கலந்து பேசுவதென்பதெல்லாம் கேலிக்கூத்தாகிவிட்டது.

வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோச மானமுறையில் உச்சத்திற்குச் சென்று கொண்டி ருக்கிறது. பல்வேறு துறைகளில் வேலையிழப்பு களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. பணக்கா ரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருப்பது, நாட்டின் பொருளாதாரத்தின் மந்த நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை யெல்லாம் மூடிமறைத்திட ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆட்டோ மொபைல் தொழில்களும் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கின்ற துணைத் தொழில்நிறுவனங்க ளும்  மூடப்பட்டுக் கொண்டிருப்பதும், தகவல் தொழில்நுட்பத்துறை உட்பட பல்வேறு துறைக ளில் வேலையிழப்புகள் அதிகரித்துக் கொண்டி ருப்பதும் வேலையின்மை என்கிற எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இருக்கின்றன. பொதுப்  போக்குவரத்து, மின்சாரம், மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகள் நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்ற சாமானிய மக்களின் வாழ்க்கையை வறிய நிலைக்குத் தள்ளுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம், சமூக நலத் துறைகளுக்கும் மற்றும் பல்வேறு நலத் திட்டங்க ளுக்கும் ஒதுக்கீடு செய்துவந்த செலவினத்தில் கடுமையான வெட்டினை ஏற்படுத்தி இருப்பது, தொழிலாளர்களின் நிலைமைகளை, குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்களின் வாழ் நிலையை மிகவும் நிலையற்றதாக மாற்றி இருக்கிறது.

அடிமைத் தனத்தை நோக்கி

மத்திய அரசாங்கமானது, இந்திய தொழி லாளர் மாநாடுகளில் (Indian Labour Confer ences) ஒப்புக்கொண்ட பரிந்துரைகளைக்கூட அமல்படுத்த மறுக்கிறது. இம்மாநாடுகளில், அரசாங்கம், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் வசதிகள், அங்கன்வாடி, மதிய உணவு மற்றும் ‘ஆஷா’ போன்ற திட்ட ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொழிலாளர் அந்தஸ்து வழங் கப்படும் என்று கூறிய எதுவும் அமல்படுத்தப்பட வில்லை. இதில் மிகவும் அதிர்ச்சிதரத்தக்க விஷயம் என்னவெனில் தேசிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக அரசாங்கத்தின் குழு அளித் திட்ட பரிந்துரைக்கு முரணாக, தொழிலாளர் துறை அமைச்சர் கேலிக்குரியவிதத்தில் அறி வித்ததுதான். அதாவது குறைந்தபட்ச ஊதியம் வெறும் 4,628 ரூபாய்தான் என்று அறி வித்தார்.  

நிரந்தரத் தொழிலாளர்களின் இடங்களைப் படிப்படியாக அப்ரண்ட்டிஸ் தொழிலாளர்களால் நிரப்பி, தொழிலாளர்-வேலையளிப்பவர் உறவு களை முற்றிலுமாக அடிமைத்தனத்தை நோக்கித் தள்ளக்கூடிய விதத்தில் பாஜக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுவர்களையும் சிறுமிகளையும் வேலைக்கு அமர்த்தும் விதத்தில் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இஎஸ்ஐ (ESI) பங்களிப்புகளைக் குறைத்திருக்கிறது. இச்சட்டங்களை வேலை யளிப்பவருக்கு ஆதரவானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. தொழிலா ளர்களின் நலன்களைக் காவு கொடுத்து, முத லாளிகளுக்கு  ஆதரவாக இத்தகைய தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, ‘வணிகம் செய்வதை எளிமைப்படுத்துகிறோம்’ என்ற பெயரில் நியாயப்படுத்திக் கொண்டிருக்கி றது. “ஒரே வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும்” என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அமல்படுத்த பிடிவாதமாக மறுக்கிறது.

வஞ்சக நோக்கம்

தொழிற்சங்க இயக்கங்களின் மீது மற்று மொரு தாக்குதல் 1926ஆம் ஆண்டு தொழிற் சங்கச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புக்கு இணங்க மத்தியத் தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பதற்கான வரை யறையை மாற்றிட அரசாங்கம் இதன்மூலம் திட்ட மிட்டிருக்கிறது. இதன் மூலம் தொழிற்சங்கங்க ளின் உள்விவகாரங்களில் தலையிடுவதே, அரசாங்கத்தின் வஞ்சக நோக்கமாகும். கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்க ளான ரயில்வே, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ், பொதுப் போக்குவரத்து, துறைமுகங்கள், நிலக்க ரிச் சுரங்கங்கள், மின் உற்பத்தி, உருக்கு, பெட்ரோலியம் உட்பட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இவற்றில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கும் அனுமதி அளித்திருக்கிறது. ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் முத லானவற்றைத் திட்டமிட்டே நலிவடையச் செய்து கொண்டிருக்கிறது.   அவற்றில் பணிபுரியும் ஊழி யர்களுக்குக் கடந்த பல மாதங்களாக ஊதியம் இல்லை.   இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்பைச் சூறையாடி, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைத்திருப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் பலவீனமடைந்திருக்கிறது.  

சாமானிய மக்களைப் பாதிக்கும்...

ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைத்திட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே அச்சுக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. ரயில்வே உற்பத்திப் பிரிவுகளை கார்ப்பரேட்டு களிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளால் ரயில்வே தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்ப டக்கூடிய அதே சமயத்தில், ரயில் கட்டணங்கள் பன்மடங்கு உயரக்கூடும் என்பதால் இதன் விளைவாக சாமானிய மக்களும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

அரசாங்கம், பத்து பொதுத்துறை வங்கி களை, நான்கு வங்கிகளாக மாற்றிடத் திட்ட மிட்டிருக்கிறது. இதற்காக அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படும் காரணங்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஏமாற்றக் கூடியவைக ளாகும். வங்கிகளில் சாமானிய மக்கள் போட்டி ருக்கும் தொகைக்கு வங்கிகள் அளித்திடும் வட்டி குறைய இருக்கிறது. இது சாமானிய மக்களைப் பாதித்திடும். குறிப்பாக, சேமிப்பிலிருந்து வரும் வட்டியை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த குடிமக்களைக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்திய நொடிப்பு மற்றும் திவால்  சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து கார்ப்ப ரேட்டுகள் வங்கிகளைச் சூறையாடிச் சென்றுள் ளதை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அந்த வங்கிகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அளிக்கவேண்டிய நிலு வைத்தொகைகளை அளித்திடவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய அரசு,  பல்வேறு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. இவை நாட்டின் இறையாண்மைக்குக் கேடு பயக்கக்கூடியவைகளாகும்.   

குப்புறத்தள்ளி குழியைத் தோண்டுகிற வேலை

பொருளாதார மந்த நிலையின் காரணமாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது முறை சாராத் தொழிலாளர்களாவர். நிரந்தரத் தொழில்களில் பணியாற்றி வந்த தொழிலா ளர்கள் வேலையிழப்பது அதிகரித்துக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில் முறைசாராத் தொழி லாளர்களின் எண்ணிக்கை நாளும் அதி கரித்துக் கொண்டிருக்கிறது. கட்டுமானத் தொழி லாளர்கள், பீடித் தொழிலாளர்கள், தெருவில் விற்பனை செய்பவர்கள், வீட்டு வேலை செய்ப வர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் – முத லானவர்களுக்குத் தனி வாரியங்கள் மற்றும் சட்டங்கள் இருக்கின்றன. இவற்றைச் செயல் படுத்திட முன்வராமல் இவற்றை ஒழித்துக்கட்ட முடிவு செய்திருக்கிறது. இதில் மிகவும் கேலிக் கூத்தான விஷயம் என்னவெனில் இவ்வாறான முறைசாராத் தொழிலாளர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கம், பிரதமர் சுரக்சா யோஜனா திட்டத்தின்கீழ் முதல் மாத ஓய்வூதியம் வரும் 2039ஆம் ஆண்டில் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யமாக வழங்குமாம்.  2039இல் ஓய்வூதியம் வாங்குவதற்கு, தொழிலாளர்கள் இப்போதி ருந்தே மாதா மாதம் தொகை கட்ட வேண்டும். இத்திட்டத்தை அரசாங்கம், திட்ட ஊழியர்கள் மீதும் திணித்துக் கொண்டிருக்கிறது. அரசு ஊழி யர்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புத்துறை தொழிலாளர் வேலைநிறுத்தம்

அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை யெல்லாம் தொழிலாளர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.  நாடு முழுதும் 41 ராணுவத் தளவாட உற்பத்தித்துறை யில் பணியாற்றிவந்த தொழிலாளர்கள் ஆகஸ்ட் 20இலிருந்து ஒரு மாத வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். வேலைநிறுத்தம் ஐந்தாம் நாளை எட்டிய சமயத்தில், அரசு, இவற்றைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் முடிவைத் தள்ளி வைத்ததன் காரணமாக போராட்டத்தை ஊழியர்களும் ஒத்திவைத்துள்ளார்கள்.   இதேபோன்றே ரயில்வேயில் ஏழு உற்பத்திப் பிரிவுகளைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க அரசு முயற்சித்தது. இங்கேயும் தொழிலாளர் கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீறு கொண்டு எழுந்தனர். வங்கிகள் இணைப்பு நட வடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். வேலைநிறுத்தத்தை நோக்கிச் சென்றி டத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து செப்டம்பர் 24 அன்று மாபெரும் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டார்கள். இவ்வாறு பொதுத்துறை நிறு வனங்கள் பலவற்றிலும் அரசின் தனியார்மயத் திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் அனைத்திற்கும் இச்சிறப்பு மாநாடு தன் முழு ஆதரவினை உரித்தாக்கிக் கொள்கிறது.  

கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குதல்

இந்த அரசாங்கமானது கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தங்களுக்கும் மிரட்டலுக்கும் முதகெலும் பின்றி வளைந்துகொடுத்துக் கொண்டிருப்பதை இச்சிறப்பு மாநாடு அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டுகி றது. சமூக பொறுப்பை நிறைவேற்றுவதற்கான வரியைக் கட்டாததற்காக  கார்ப்பரேட்டுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்திருப்ப தோடு, அவர்கள் அளிக்க வேண்டிய சர்சார்ஜ் வரிகளையும் தள்ளுபடி செய்திருக்கிறது. இப்போது நிதி அமைச்சர், பொருளாதார மந்தத்தைச் சரிசெய்யப்போகிறோம் என்ற பெயரில் கார்ப்பரேட் வரிகளை 30 சதவீதத்தி லிருந்து 22 சதவீதமாகக் குறைத்திருக்கிறார். ஆனால் தொழிலாளர்களும், ஊழியர்களும் 30 சதவீத வருமான வரி கட்டித்தான் ஆக வேண்டும். இவ்வாறு 1.4 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கி றார். இதன்விளைவாக மக்களின் வாங்கும் சக்தி  உயரப் போவதில்லை. வேலை வாய்ப்பை உரு வாக்கப் போவதில்லை. நிலைமைகள்  மேலும் மோசமாகிவிடும்.

பாஜக அரசாங்கம் புதிய மோட்டார் வாகனச்  சட்டத்தை நடைமுறைப்படுத்தியபின் சாமானிய மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பினைச் சம்பா தித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக போக்குவரத்துத்துறையில் உள்ள சங்கங்கள் அரசை எச்சரித்த போதிலும், அதற்கு பாஜக அரசாங்கம் செவிசாய்த்திடவில்லை.   ஆட்சியாளர்கள் மத்தியில், தேர்தல் வெற்றியின் மமதை மறைந்துகொண்டிருக்கி றது. 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப் பட்டதற்கு எதிராகவும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் மக்கள் எழுச்சியுடன் திரண்டுகொண்டிருக்கிறார்கள். பாஜக அரசாங் கத்தின் முதலாளிகள் ஆதரவு, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் நாசகர தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள். வேலையின்மை காரணமாக உண்ண முடியாத நிலைமையை வெறும் வாய்ச்சவடால் உரைகளால் பூசி மெழுகிட முடியாது.

சரி சமமான முறையில் பகிர்ந்தளிக்க...

இந்த அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கை களை எதிர்த்து முறியடித்திட அனைத்துத் தொழி லாளர்களும் சங்க வித்தியாசங்களை மறந்து ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அனைத்துத் தொழிலாளர்க ளையும் அறைகூவி அழைக்கிறது. நம் நடவ டிக்கைகளின் மூலமாக ஆட்சியாளர்களுக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்திடுவோம். உண்மை யில் நாம்தான் செல்வ வளங்களை உரு வாக்குபவர்கள்.  நாம் உருவாக்கிய செல்வ வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த அரசும் ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாகத்தான் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து அதன் தொடர்ச்சியாக பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கிறது.

நாம் உருவாக்கிய செல்வம், நாட்டு மக்கள் அனைவருக்கும் சரிசமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் கோரு கிறோம். இன்றைய நிலையில் தற்போதைய நடப்பு வாழ்க்கைச் செலவுப் புள்ளி (cost of living index) அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000- தேவை என்கிறோம். அனை வருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000- வேண்டும் என்கிறோம். நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் அனைவரையும் இணைத்து ஒரு வலுவான வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் வேண்டும் என்கிறோம். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் வேலைநாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்கிறோம்.

கிராமப்புற வறுமையை விரட்டியடிக்க...

கிராமப்புற வறுமையை விரட்டியடித்திட பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளைபொருள்களுக்கு கட்டுபடி யாகக்கூடிய விதத்தில் விலை நிர்ணயிக்க வேண்டும். அவர்களின் விளைபொருள்களை வாங்கக்கூடிய விதத்தில் கொள்முதல் நிலைய வசதிகள் வேண்டும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். திட்ட ஊழியர்கள், இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் ஒருமனதானப் பரிந்துரையின்படி, தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒப்பந்தமுறை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் அனை வருக்கும் சம வேலைக்கு சம ஊதியம்  அளிக்கப் பட வேண்டும்.   இவ்வாறு அடிப்படையான கோரிக்கைகளை வைத்து நாம் போராடும்போது, நம் ஒற்று மையை உடைப்பதற்காக மதவெறி சக்திகள், சாதி வெறி சக்திகள், பிளவுவாத சக்திகள், நம்மை மத ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிரிப்பதற்கும்  மற்றும் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பல்வேறு இழிநடவடிக்கைகளிலும் ஈடுபடும். இத்தகைய பிளவுவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் கொடாது, நாம் நம் ஒற்றுமை யைக் கட்டிக் காத்து முன்னேறிட வேண்டும்.

எனவே, இச்சிறப்பு மாநாடு, கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை வரவிருக்கும் மூன்று மாதங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறது.

  • 2019 அக்டோபர், நவம்பர் மாதங்களில் துறை வாரியாகவும், மாவட்ட, மாநில அளவிலும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து சிறப்பு மாநாடுகள் நடத்திட வேண்டும்.
  • இப்பிரகடனத்தை மிகப்பெரிய அளவில் நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு டிசம்பர் மாதம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • 2020 ஜனவரி 8 அன்று மாபெரும் அகில இந்திய வேலைநிறுத்தம்.

வேலைநிறுத்தம் வெற்றிபெறவும், நம்  கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க அரசாங்கம் தவறுமானால் அதனைத்தொடர்ந்து விடப்படும் அறைகூவல்களை வெற்றிகரமாக எடுத்துச் செல்லவும் அனைத்துத் தொழிலாளர்களும் சங்க வித்தியாசங்களை மறந்து ஒன்றுபட்டு நின்று போராட முன்வர வேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு நாட்டு மக்கள் தங்கள் ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் இச்சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.