tamilnadu

img

ஜனவரி 8, 2020 - க.சுவாமிநாதன்

கணக்கு கேட்போம்!

 

கணக்குகள் எப்போதுமே சின்னவைதான். ஆனால் அவை தெரியாததால் இழப்பது எவ்வளவு என்ற கணக்குதான் பெரியது! 
 

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் (BPCL) மத்திய அரசால் பங்கு விற்பனைக்காக மாலை போட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளில் ஒன்று. 

“இப்போது பி.பி.சி.எல் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ. 1.06 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசின் பங்குகளாக உள்ள 53.29 சதவீதம் விற்கப்பட்டால் 30% பிரிமியம் சேர்த்து ரூ 74000 கோடி கிடைக்கும்.” அடேயப்பா எவ்வளவு பெரிய தொகை என்று மலைக்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள்.
 

“பி.பி.சி.எல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு சந்தை விலையில் இப்போது கிட்டத்தட்ட ரூ. 9 லட்சம் கோடி.” இது மாற்றத்தக்க மதிப்பிடல் முறையில் (Replacement Valuation Method) போடப்பட்டுள்ள கணக்காகும். இந்த சொத்துக்களை கையாளக் கூடிய வாய்ப்பை ரூ. 74,000 கோடிகளுக்கு தனியார் பெறப்போகிறார்கள். 
 

மஹாரத்னா அதிகாரிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் முகுல் குமார் கணக்குப்படி “இந்த பங்கு விற்பனை நடந்தால் அரசின் கஜானாவுக்கு ரூ. 4.46 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.” (இந்து பிசினஸ் லைன் - 10.12.2019 - பக்கம் 4). 
 

நிர்வாகக் கட்டுப்பாட்டை இப்படி அடி மாட்டு விலைக்கு விற்பது பிற்போக்கானது, பிரயோசனம் அற்றது என அக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 
 

இது மக்களின் வரிப்பணத்தில் உருவான நிறுவனம். மக்களின் வியர்வை வாசம் கலந்து கட்டப்பட்ட நிறுவனம் அது. 
 

“நாளெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ! பொதுத் துறை நிறுவனங்கள் சாவதோ! தனியார்கள் வாழ்வதோ!”
 

“கணக்குக் கேட்கும், கேள்வி கேட்கும் நாள் ஜனவரி 8”