மன்னார்குடி, ஏப்.15 தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஞாயிறு மாலை மன்னார் குடி மேலராஜவீதி, பந்தலடி காந்தி சாலைபகுதிகளில் வாக்கு சேகரித்தார். கூட்டணி நகர தேர்தல் பணிக்குழுவின் தலைவர் வீராகணேசன் தலைமையில் நடைபெற்ற வாக்குசேகரிப்பு இயக்கத்தில் நகர தேர்தல் பணிக்குழுவின் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் ஆர்.பி.சித்தார்த்தன், எஸ்.ஆறுமுகம், அறிவுக்கொடி, எழிலரசன், சன் சரவணன், வி.கலைச்செல்வன், என்.மகேந்திரன், கோவி.மீனாட்சி சுந்தரம், ஆர்.கனகவேல், எஸ்.செல்வராஜ், தா.முருகையன், முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.