districts

லட்சத்தோப்பு 22 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாக்குச் சேகரிப்பு

தஞ்சாவூர், பிப்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி லட்சத்தோப்பு 22 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்தில் சிபிஎம் வேட்பாளர் எம்.ஆர்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்குகள் சேகரிக்கும் வகையிலும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும், பட்டுக்கோட்டையில் சிபிஎம் தேர்தல் பணிமனைக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் செவ்வாய்க்கிழமை வந்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்செல்வி, எம்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, வேட்பாளர் எம்.ஆர்.செந்தில்குமார்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.