திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 3 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்ழகன் மாகாளிபட்டி பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக கிளைச் செயலாளர் ரத்தினம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.