tamilnadu

img

டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி போராட்டம்

திருவாரூர், மே 7- மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுக்கடை களை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் கட்சியினர் தங்களின் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடியேந்தி தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவாரூர் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் புதூர் நமசிவாயபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது எதிர்ப்பை தெரி வித்தார். இதே போன்று கட்சியின் மூத்த தலை வர்கள், உறுப்பினர்கள் தங்களின் இல்லங்க ளுக்கு முன்பாக தனிநபர் இடைவெளியுடன் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக மற்றும் தோழ மைக் கட்சியினரும் இதே போன்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அறந்தாங்கி 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், அவரது மகள் ஒவியா சுகிர்தா ஆகியோர் கோஷமிட்டு எதிர்ப்பு தெரி வித்தனர். அதே போல் சுப்பிரமணியபுரத்தில் சிபிஎம் அறந்தாங்கி தாலுகாச் செயலாளர் தென்றல் கருப்பையா, அவரது மனைவி, மகள்களுடன் வீட்டு வாசலில் தனிநபர் இடைவெளியுடன் நின்று எதிர்ப்பு தெரிவித்த னர். திமுக கூட்டணி கட்சியினர் அவரவர் வீட்டு வாசலில் குடும்பத்துடன் கருப்பு பேட்ஜ், கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு கோஷ மிட்டனர்.
தரங்கம்பாடி
டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம், திருக்கடையூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமையில் நடைபெற்றது. கட்சி  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, இளைய ராஜா, குணசுந்தரி, அய்யப்பன் உள்ளிட் டோர் கண்டன முழக்கமிட்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கருப்புச்சட்டை அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஎம் பொன்னமராவதி ஒன்றியச் செய லாளர் என்.பக்ருதீன் அவரது இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சிபிஎம் அலுவல கத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், சாத்தையா, மாயழகு மற்றும் அரச மலையில் பிச்சை, காரையூரில் சௌந்தர ராஜன், உடையாம்பட்டியில் ராமசாமி, திமுக சார்பில் பொன்னமராவதி நகரத்தில் நகர செயலாளர் அழகப்பன் தலைமையில் கணேசன், சிக்கந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் பழனியப்பன் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினார்.