சென்னை:
பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் ‘இந்திய கடல் மீன்வள மசோதா 2021’ஐ திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.
கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் துணைத் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில உதவி செயலாளர் வி.குமார் கலந்து கொண் டார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
இந்திய கடல் மீன்வள மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளது. இந்த மசோதாவில், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்து, கடற் கரைகளில் இருந்து வெளியேற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.உதாரணமாக நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரை அண்மை கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரை சிறப்பு பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் பன்னாட்டு கடல் என்று வரையறை செய்யப்பட்டுள் ளது. பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைல் வரை மட்டுமே சென்று மீன்பிடிக்க வேண்டும். அதற்கு அப்பால் சென்று மீன்பிடிக்க அனுமதியில்லை. மீறினால் படகுகள் பறிமுதல் செய்யப்படும். ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.மீன்பிடிக்கும் அனைத்து படகுகள், மீன்பிடிக்கும் பகுதியின் தன்மைக்கேற்ப கட்டணம் செலுத்தி மீன்பிடி உரிமம் பெற்றுத்தான் கடற் தொழில் செய்ய வேண்டும். வெளிப் பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் பைபர் படகுகளும் கப்பல்களாக கருதப் பட்டு அவைகளும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இப்படகுகளை இயக்கும் மீனவர் ஓட்டுநர் உரிமம்எடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும்.
இதனை மீறும் மீன்பிடி படகுகளின் உரிமையாளருக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படுவதோடு, மீன்பிடி படகின் உரிமை ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளடக்கி ஒன்றிய மோடி அரசுஇந்திய கடல் மீன்வள மசோதா 2021 கொண்டு வருகிறது. பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய கடல் வளத்தை கொள்ளையடிக்க கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருப்பு கொடி போராட்டம்
இந்த மசோதாவை கைவிடக் கோரி திங்களன்று (ஜூலை 19) தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து கடலோர கிராமங்களிலும் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்திட அனைத்து மீனவ பேரமைப்புகளின் சார்பில் அறைகூவல் விடுக்கப் பட்டது. அதன்படி போராட்டம் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.முன்னதாக, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சென்னை-செங்கை மீன்பிடி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.லோகநாதன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.அந் தோணி, நிர்வாகிகள் பேச்சிமுத்து, சுப்பிரமணி, ஜெயசங்கரன் உள்ளிட் டோர் பேசினர்.