tamilnadu

img

வனத்துறை விடுதியில் தூக்கில் தொங்கிய பெண் ஊழியர்

 திருவண்ணாமலை, அக். 28- திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் வனத்துறை  அலுவலகத்தில் பெண் ஊழியர் தூக்கில் தொங்கிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  சின்ன மூஞ்சூர் ஜெய்பீம் நகரைச் சேர்ந்த வர் லாவண்யாதேவி (24). இவருக்கு கடந்த  ஜனவரி மாதம் வனத்துறையில் வேலை கிடைத்தது. கோவையில் பயிற்சியில் சேர்ந்த அவர் பயிற்சி முடித்து கடந்த மார்ச்  மாதம் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார். சின்னகடை தெருவில் உள்ள வனத் துறை விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த  சில நாட்களாக லாவண்யாதேவி விரக்தியாக, மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் 2 நாட்களாக லாவண்யாதேவியின் விடுதி  அறை திறக்கப்படாமல் மூடியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக லாவண்யா தேவியின் அறையை பார்த்தனர். அப்போது அவர் மின் விசிறியில் பிணமாக தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர் லாவண்யாதேவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து  கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.