tamilnadu

சுடுகாட்டுப் பாதை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை, ஆக. 26- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்  கம்பாடி கிராமம்.  மாதா கோயில் தெரு வில், 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.  இந்த  கிராம மக்களுக்கான சுடுகாடு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், அந்த சுடுகாட்டிற்கு பாதை  வசதி இல்லாததால் விவசாய நிலத் தில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்போது விவசாயிகள், சாகுபடி பயிர்கள் சேதமடைவதாகக் கூறி, நிலத்திற்குள் சடலத்தை எடுத்துச் செல்ல ஆட்சேபனை தெரி வித்து வந்தனர். இதனால், இரு தரப்பி னருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கால்  வாயில் இறங்கி, சடலத்தை கொண்டு  செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்  டது. இதனால் பொதுப்பணி துறைக்கு  சொந்தமான கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து தரும்படி, அப்பகுதி  கிராம மக்கள் பலமுறை அதிகாரி களிடம் கோரிக்கை  வைத்தனர்.ஆனால், இதுவரை அந்த கோரிக்கை  மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் சனிக்கிழமை யன்று(ஆக.24)அந்தப் பகுதியைச் சேர்ந்த அந்தோணியம்மாள்  என்ப வர் உயிரிழந்தார். அவரது உடலை  அடக்கம் செய்வதற்காக  சுடுகாட் டிற்கு மக்கள் எடுத்துச் சென்றனர். கீழ் வணக்கம்பாடி -  தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏரிக்கரை அருகே கால்வாயில் சடலத்தை வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுடுகாட்டுப் பாதை தொடர்பாக சம்மந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பேசி, உரிய நட வடிக்கை எடுப்பதாக தகவல் தெரி வித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.