court

img

துணை வேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை,ஏப்.29- துணை வேந்த ஜெகநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் சாட்சிகளைக் கலைத்தால் கைது செய்து விசாரணை நடத்தலாம் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்து உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக விதிகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி முறைகேடு செய்த புகாரி ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெகநாதன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.